அருஞ்சொற்பொருள்- அறிமுகப் படலம்
1. இப்பாடல் ஆழ்வார்களின் திராவிடவேதம் எனப் போற்றப்பெறும் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் திருமழிசை ஆழ்வார் இயற்றிய நான்முகன் திருவந்தாதி என்ற நூலின் முதற்பாடலாம்
2. பஞ்சீகரணம் – நிலம், நீர், நெருப்பு, காற்று, வான் என்னும் ஐம்புலப்பொருட்களின்
வெவ்வேறு விகிதாச்சாரச் சேர்க்கை
3. திண்ணிய – வலிமை மிக்க ; அயன் - நான்முகன்
4. கட்புலம் – கண்பார்வை ; சேணுலகு – மேலுலகு ; விஞ்சையர் – வித்தியாதரர் ;
தாணு – சிவன்
5. ஆய்கலாவல்லி – தாயாகிய கலைமகள் ; காந்தன் – கணவன் ;
அருஞ்சொற்பொருள்- பொய்நாடகப் படலம்
6.
7. நியம வினைப்பயன் – பௌதிக மற்றும் ஆன்ம செயல்பாடுகளின் பயன்கள்
8. விதிசெய்வோன் – நான்முகன் ; மதிசடையான்,உமைபாகத்தான் – சிவபெருமான்
9. உலைந்து – களைத்து
10. உகைத்த – இணங்கும்படிச் செலுத்திய ; திசைமுகன் – நான்முகன் ; கூஞ்சசியோன் – சிவன் ; புய்தான் – பறித்தான்
11. தொழப்படா ஆண்டவன் - நான்முகன்
அருஞ்சொற்பொருள்- காதல் மணப் படலம்
12. விதுப்பு – ஆசை,விருப்பம் ; நாமகள் – சரசுவதி ; கோது – குற்றம்
13. பேது – பேதைமை ;
14. மன்றல் – திருமணம் ; விரிஞ்சன் – நான்முகன் ; நீர்வேணியன் – சிவன் ;
வேட்பு – விருப்பம்
15. வாட்புல நாயகி – கலைமகள் ; கஞ்சரன் – நான்முகன் ; கைக்கிளை – ஒருதலைக்
காதல்
16.
17. சிரம் – தலை ; புனற்றலையன் – சிவனார் ;
18. விடையோன் – சிவன் ; திருமாது – இலக்குமி ; தருக்கு – ஆணவம் ;
கஞ்சன் - நான்முகன்
19. தமனியன், மிடாரி – நான்முகன் ; புந்தியாள் – கலைவாணி
20.
21. வராகப் பொருகோடு – பன்றியின் முகத்திலுள்ள கொம்பு ; திரு – இலக்குமி ;
உரம் – மார்பு ; கமலத்தோன் – நான்முகன்
22. கோலி – சூழ்ந்து வளைத்து
23. பேரவுணர் – பெருமரக்கர் ; பாட்டன் – பிதாமகன் எனப்படும் நான்முகன்
24. களியுலகு – களிப்பு பொங்குமுலகு
அருஞ்சொற்பொருள்- புட்கரப் படலம்
25. ஏது – குற்றம் ; மாக்கள் – விலங்குகள் ;
26.
27. சயந்தன் – இந்திரன் மகன் ; தாதை – தந்தை
28. புரந்தரன் – இந்திரன் ; புல்க – நட்பினால் வரவேற்றுத் தழுவ ;
29. தாமரையான் – நான்முகன்
30. போதன் – நான்முகன்
31. விசைவுற – மிகவேகமாக ; நசையறு – விருப்பமற்ற
32. புல்லர் – அறிவற்றவர் ; கடுகி – விரைந்து
33. ஒசிந்தனள் – உடைந்தனள் ; முசிந்தனள் – ஊக்கம் குன்றி களைத்தழிதல் ;
34. பாமகள் – கலைமகள்
35. தேசுடை – ஒளிபொருந்திய
அருஞ்சொற்பொருள்- சிறைமீட்புப் படலம்
36. சால்பு – மாட்சிமை
37. வேதசன் – நான்முகன்
38. கயந்திடார் – தளரார், வெறுக்கமாட்டார் ; குஞ்சிகை – தலைமுடி; சென்னி - தலை
மஞ்சிகை – காதணி
39. விதி - நான்முகன்
40. விதியோன், முதியோன் - நான்முகன் ; விதி - ஊழ்வினை
41. சதுமுகன் – நான்முகன் ; வரைமகள்கேள்வன் – சிவன் ; ஐந்தவி – கலைவாணி
அருஞ்சொற்பொருள்- கணைநலப் படலம்
42. மன்பதை – மக்கள்
43.
44. தசமுகன் – இராவணன் ; துன்னலர் – பகைவர் ; காகுத்தன் – இராமபிரான் ;
ஆரணத்தான் – நான்முகன்
45. சம்பு – சிவன் ; செறுதல் – கொல்லுதல் ; உம்பர் – வானோர் ;
46. வீறு – வெற்றியுறும் வீரம்
அருஞ்சொற்பொருள்- கண்ணன் வீறறி படலம்
47. தூறுபட – அழியும்படி ; வாறுபட – வலிமைபட,விதம்பட ; விச்சு – மிகுதி, அதிகம்
48. வன்பிலம் – வலிமையான சுரங்கம் ; ஆயர் - இடையர் ; பார்த்தனின் சேயன்சேய் – அபிமன்யுவின் மகன் பரீட்சித்து ; அளை – குகை ; மாயன் – கண்ணன்
49. பரந்தாமன் – திருமால் ; மாநிரை – பசுக்கூட்டம் ; சிறுவர் – ஆயர்பிள்ளைகள் ; இருக்கன் – நான்முகன் ;
50. தருக்கு – ஆணவம் ; பேரா – சிதையாதவை, நிலைமாறாதவை
அருஞ்சொற்பொருள்- மறைமீட்புப் படலம்
51. அஃகும் – குறைந்திருக்கும் ; பரிமுகஆரவுணன் – குதிரை முகங்கொண்ட அரக்கன் சமரம் – போர்க்களம் ;
52. வார்ப்புடை – சூசகமிக்க ; புல்லன் – கீழ்மகன் ;
53. ஊழியின் ஓதம் – பிரளய வெள்ளம் ;
54. கயலானது – மீனாயானது ;
55. கருமுகில்வண்ணன் – திருமால் ; புரவி – (அரக்கனாகிய) குதிரை ; பொறையிரு– பொறுமையாயிருப்பாய் ;
56. சிருட்டி – படைப்பு ;
57. வீட்டி – கொன்று ;
58. பாழி – மேன்மை ;
அருஞ்சொற்பொருள்- பிரம்மோற்சவப் படலம்
59. தூவி – இறகு ; புய்தது – பறித்தது ;
60. தூமனத்து ஆய் மங்கை – தூய மனம்கொண்ட இடைக்குலப் பெண் காயத்திரி; கொண்டு கூட்டுப் பொருள்கோள் – புகுந்ததும் தாமரையாம், வேள்வி புனைந்ததும் புட்கரத்தே, இல்லாள் வெகுண்டதும் மணம் செய்ததால், சாபம் விதித்தது அகன்றது தூமனத்தாய் மங்கையால்தான்
61. சதமகன் – இந்திரன் ;
62. பேருலகானந்தம் – மோக்க உலகத்தில் மிளிரும் இன்பம் ;
63. சச்சிதானந்தம் – சத்து, சித்து, ஆனந்தம் ;
64. மருங்கே – அருகே ; ஒருங்கே – ஒன்றிணைந்து ; ஒல்கு – கூசிக் குறுகு ;
65. பெருநாடு - மோக்க உலகம் ;
66. வீவற – குற்றமின்றி ; விழவு – திருவிழா ;
67. விடையமரும் ஈசன் – காளைமாடான இடபத்தின் மேலமரும் சிவன் ;
68. பிரமோச்சவம் – ஆண்டிற்கொரு முறை நடத்தப்படும் கோயில் திருவிழா ;
69. நீர்மை – எளிமை ; மானவரை – மனிதர்களை ;
70. நாமகள் – கலைவாணி ;
71. செறிபுலம் – நெடுநோக்குள்ள சீரிய அறிவு ;
அருஞ்சொற்பொருள்- அத்திகிரி அருளாளப் படலம்
72. பரிவேட்டல் – அசுவமேத யாகம் ; அத்திகிரிவரதன் – ஹஸ்திகிரி என்னும் வேழமலைமேல் அமர்ந்த வரதராசப் பெருமான் ; இச்சித்து – விரும்பி ;
73. வேட்டல் – வேள்வி செய்தல் ; ஆகுதி – வேள்வித்தீயில் வழங்கப்படும் காணிக்கை ;
74. அவி – வேள்வியில் தேவர்க்கு அளிக்கப்படும் உணவு ; அர்ச்சை – சிலைவடிவம் ;
75. யோனி கணக்கறு – எண்ணிக்கைக் கணக்கற்ற உயிரினம் ; ஆணி – பொன்னான ;
76. வள்ளல் – வரதராசப் பெருமாள் ;
77. ஊற்றம் – தீவிர விருப்பம் ;
78. தந்தை வரதராசன் – நான்முகன் தந்தையான திருமாலாகிய வரதராசப்பெருமான் ;
79. ககனநீர் – ஆகாய கங்கை ; நிரைசெகும் – வேள்விக் குழுவையழிக்கும் ;நிவந்து – நீண்டு வளர்ந்து ;
80. தம்மவர் – தம்மைச் சரண்புகுந்த தொண்டர் ;
81. ஆத்தன் – காக்கும் நண்பன் ;
82. துய்யுநிலை – படுத்திருக்கும் நிலை ;
83. வார்சிலை – ஐம்பொன் சிலையான் வரதராசப் பெருமான் ;
84. அடைவறு – அடைப்பும் தடுப்பும் இல்லாத ;
அருஞ்சொற்பொருள்- மாண்டு மீண்ட படலம்
85. பொன்றுவித்து – கொன்று ;
86. நேமியன் – திருமால் ; வாமியன் – சிவன் ;
87. சேர்மதியோன் – சிவன் ;
88. நெய்தல் – கடலைச் சார்ந்த நிலம் ;
89. அரங்கேற்ற – நாடகமாய் நிகழ்த்த ;
90. வேலை இறங்கா – கடலுக்குள் செல்லாத ;
91. கூரெயிற்றுச் சேல் – கூர்மையான பற்களுள்ள மீன்; பவித்திரம் – புனிதத்தன்மை ;
92. அடலாகி – பெருமீனாகி ; சமர் – போர் ;
93. வெருவிட – அச்சப் படும்படியாக ; நாட்டிய நாதன் – சிவன் ;
94. நெய்தல்கோன் – கடல்சார் நிலமன்னன் ; கண்ணுதல் – சிவன் ;
95. கூத்தன் – சிவன் ; உவர்மீன் – கடலின் உப்பு நிறைந்த மீன் ;
96. நசையொடு – விருப்பமுடன் ; உமைபங்கர் – சிவன் ;
அருஞ்சொற்பொருள் -மாட்சிமைப் படலம்
97. வியனுலகு – தேவருலகம் ;
98. பந்தரில் – மணப்பந்தலில் ; சடைநீரன் – சிவன் ; அலகுநீங்க – எண்ணிக்கை நீங்க;
99. பூங்காமன் – மன்மதன் ;
100. போரவிட – போகவிட ; வன்பாங்கு – கொடுமையான வழக்கு ;
101. புள் – பறவை ; மாதங்கி – கலைவாணி ;
பொருள்கோள் முறை - பார்நாதன் ஏந்தியதும் வேதத்தைக் கையினில், பூவினைத் தூண்டியதும் வன்பொய்யுரைத்திட, பேர்மணம் கொண்டதும் மாதங்கி, பேர்ந்திட ஊர்வதும் புள்ளன்ன மாம் !
102. வெள்ளை மரையமர் – வெண்மையான தாமரை மலரில் அமர்கின்ற ;
103. செந்நாவாள் – கலைவாணி ;
104. புலமடந்தை – கலைவாணி ; மதிமருளும் – அறிவு மயக்கம் ;
105. போதெலாம் – பொழுதனைத்தும் ;
106. ஆற்றும் – திறம்படச் செய்து முடிக்கும் ;
107. அவமே – இகழ்ச்சியே ;
108. சங்கமித்து – ஒன்று சேர்ந்து ;
நான்முகன் நூற்றந்தாதி முற்றும்