கோயில்களில் இறைவனுக்குப் படைக்கப்படும் நைவேத்தியப் பொருளாக அரிசியையே தொன்றுதொட்டு பயன்படுத்தப்பட்டது. இதற்கு, சிறுதானிய வகையைச் சேர்ந்த “ பிரசாதிகா” என்ற பெயர் கொண்ட ஒரு சத்துள்ள அரிசியால் உணவு செய்யப்பட்டு காலங்காலமாக படைத்து வந்ததால், பின்னாளில் இறைவனுக்கு அவ்வகை தவிர ஏனைய வகை அரிசிகள் விலக்கப்பட்டன. பிரசாதிகா என்ற பெயரே கோயில் வட்டாரங்களில் அரிசியாகக் கொள்ளப்பட்டது. அதனால் இறைவனுக்குப் படைக்கப்படும் உணவு பிரசாதம் ( பிரசாதிகா சாதம் ) என்றானது. இந்நாளில், இனிப்பு மற்றும் கார வகைப் படையல் மட்டுமன்றி பூசுபொருள்களான விபூதி, மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்றவற்றையும் பிரசாதம் என்ற பெயரால் அழைப்பதும் பிரசாதிகாவின் மருவலேயாம் !!!