கொண்டல் வண்ணனும் கூன்பிறை யோனும்தன்
புண்டரிக மலர்த்தாள் போற்ற நின்றானை
அண்டத்துள் ஞானம் அமைத்த நான்முகனைக்
கண்ட சிந்தை மற்றொன்றினைக் காணாதே !
அகலகில்லேன் கணமுமென்றுன் நாவுறைகலை வாணி கேள்வா !
நிகரில் ஒளியாய் ! உலகம் நிறைந்துறை விதி செய்வோனே !
நிகரிலமரர் உயிர்க்கணங்கள் வணங்கும் திருப்பட்டூரானே !
புகலொன்றில்லாவடியேன் உன் பொன்னடிப் புகுந்துய்ந்தேனே !
சாற்றும் மரைமாலை சாற்று மணிதுகில்
சாற்றுந் துதிப்பாடல் சேர்ந்துநமைக் – கூற்றின்
மருங்கே விடாமல் மறைப்ப ; அயனார்க்கு
ஒருங்கே வழிபடாமைக்கு ஒல்கு !
ஒல்காப் புகழுடன் ஓங்குபெருஞ் சீர்தரும்
பல்வேறு செல்வங்கள் பாங்குறக் – கொள்வீர் !
அருமறை நாதனை ஆழ்மனத்தில் தைத்துப்
பெருநாடு அடைவதே பேறு !
சாற்றுமுறைப் பாடல்கள்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு
பலகோடி நூறாயிரம் – சொல்லாளும்
திண்தோள் சதுமுகனே ! உன் சேவடி
செவ்வித் திருக்காப்பு !
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு !
வடிவாய் நின் நாவதனில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு !
வடிவார் சோதிச் சுடர்ஞான வெள்ளோதிமமும் பல்லாண்டு !
விடையூரும் ஈசனும் மாலும் விழைந்தேத்துவர் பல்லாண்டே !
மஹாதேவ்யை ச வித்மஹே ஶாரதாயை ச தீமஹி |
தந்நோ வாணீ ப்ரசோதயாத் ||
ஸரஸ்வத்யை ச வித்மஹே ப்ரம்மபத்ந்யை ச தீமஹி |
தந்நோ வாணீ ப்ரசோதயாத் ||
ஓங்கார மந்திரத்தின் உற்றபொருள் ஓர்ந்தறிய
மூங்கையான் பேச முனைவபோல் - தேங்கிய
பூமனத்தா சையாற் புகுந்தென் புலம்நிறைய
நாமகளே வாராய் நயந்து ! 2
வெண்டா மரைமலராள் வீணையாம் கேலிகலைக்
கொண்டாள் திருக்கையில் ; கோதிலாப் - பண்டான
வேதங்கள் தாமோதும் வாணீசன் நாவுறையும்
மாதங்கி பேர்சொல் மகிழ்ந்து !
தேர்ந்த மறைகலையால் தெள்ளிய ஐம்பூதம்
சேர்ந்த இயற்கைப் பஞ்சீகரணஞ்- சார்ந்த
படைப்பாம் தொழில்செய் பிரமன் மலர்த்தாள்
அடைவாம் சரண மறி !
வேதாத்மனே ச வித்மஹே ஹிரண்யகர்பாய தீமஹி |
தந்நோ பிரம்மா ப்ரசோதயாத் ||
வனமாலி சுதோவாணீ காந்தஸ்ருதி விபூஷித: |
தீமான் நாலீக வாஸஸ்ச ப்ரம்மதேவோபி ரக்ஷது ||
வேதமாத்ரே ச வித்மஹே வாகீஸ்வர்யை ச தீமஹி |
தந்நோ மேதா ப்ரசோதயாத் ||
சர்வதேச தசாகாலேஷு அவ்யாஹத பராக்ரமா |
மேதாப்ராணேஸ திவ்யாக்ஞா வர்த்ததாம் அபிவர்த்ததாம் ||
மேதாப்ராணேஸ திவ்யாக்ஞா ப்ரதிவாஸர முஜ்வலா |
திகந்த வ்யாபினீ பூயாத் ஸாஹி லோக ஹிதைஷிணீ ||
ஸ்ரீமந் ஸ்ரீபுஷ்கர ஸ்ரிய மனுபத்ரவாம் அனுதினம் ஸம்வர்த்தய |
ஸ்ரீமந் ஸ்ரீபுஷ்பவன ஸ்ரிய மனுபத்ரவாம் அனுதினம் ஸம்வர்த்தய ||
நமஸ் ஸ்ரீபுஷ்கரேஸாய நாபீகமல ஜன்மனே |
ப்ரசாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய தாயினே ||
பரப்ரம்ம தயாபாத்ரம் தீமத்யாதி குணார்ணவம் |
சதுர்முகமஹம் வந்தே சாரதாயா: பதிம் விதிம் ||
வாழி கலைமாது வாழ்நாவன்; மாதகவால்
வாழி பிரமேசன், மூநால்வர் – வாழுமூர்;
மாறும் விதிநல்க மண்ணிறங்கி வந்தானைச்
சேரும் படிபட்டூர்ச் செல் !
செய்ய பொற்றாமரைத் தாளிணை வாழியே !
சீதர னுந்திதன் செங்கமலம் வாழியே !
துய்யு நாவமர்ந்த துணையாளும் வாழியே !
துரீயன் ஊர்ந்திடும் ஓதிமப்புள் வாழியே !
கையதனில் ஏந்திய செபமாலை வாழியே !
கரவுடை ஒலிமறை கமண்டலமும் வாழியே !
பொய்யினால் நிலைகெடும் என்றே உலகுணரப்
பேருண்மை நாடக மாடியவன் வாழியே ! 3
அடியார்கள் வாழ அருள்பெற்றோர் வாழ
கடிமறைச் சொற்பொருள்தாம் வாழ – கடல்சூழ்ந்த
மண்ணுலகம் வாழ மதிவாணீ ! நான்முகனே !
என்னெஞ்சில் என்றும் இரும் !
நானிலம் தான்வாழ நான்மறைகள் தாம்வாழ
வானிருக்கும் வல்லோர் வகைவாழ – தேனிருக்கும்
தாமரை வீற்றிருக்கும் தாரணி தந்தையே !
நீமருவென் னுள்ளத்தி னுள் !