ஓர் ஆய்வுக்கட்டுரை
நமது இதிகாச புராணங்களில் எண்ணற்ற விஷயங்கள் கதைகள் , நிகழ்வுகள் வாயிலாகச்
சொல்லப்பட்டுள்ளது அறிவோம். ஆனால் அவற்றுள் பல விஷயங்கள் நாத்திகர்களால்
நம்பகத்தன்மை அற்றவை போல பேசப்பட்டும், பிரச்சாரம் செயப்பட்டு வருவதும் அறிந்ததே !
இந்நிலையில் இப்புராணங்கள் கூறும் செய்திகளில் எவ்வளவு உண்மை இருக்கலாம் என்ற
ஆய்வின் அடிப்படையில் இக்கட்டுரை வரையப்படுகிறது
இறை தத்துவம்
புராணங்கள் விளக்கும் இறைதத்துவம் அனைத்தையும் கடந்த ஒரு விசையாக ,
நிலையாக,ஆற்றலின் இருப்பிடமாக,எதுவும் அதற்கு ஈடற்றதாக காட்டப்படுகிறது. உண்மையில்
நாம் அறிந்த விஷயங்களில் , எது ஆற்றலின் உருவாக , அதிகபட்ச வேகமாகப் பாய்வது என
ஆராய்ந்தால் அது மின்சாரம் என விளங்கும் ; அந்த மின்சாரத்தின் சமமான மற்றொரு ஆற்றல்
வடிவானது ஒளியே ! அந்த ஒளி தான். இறையின் வடிவாகக் காட்டப்படுகிறது.! ஒளியே
காலத்தை நிர்ணயம் செய்வதாகும்.!
காலம்
காலம் என்ற 4 ம்அலகுஒளியின் வேகத்தினால்அமைவது.ஒளியின் வேகத்திற்குக் குறைந்த
காலத்தில் பயணித்தால் காலக்கணக்கு தொடங்கும்! அதாவது சூரியனிலிருந்து ஒளி புறப்பட்டு நம்
பூமியை சுமார் 8 நிமிடங்களில் அடைகிறது . எனவே , எல்லா சூரிய ஒளியின் வயதும் நம் பூமியில் 8
நிமிடம் . வருடங்களில் சொன்னால் , 0.000015 வருடம் வயது. பயணப்டுவதால் ஒளிக்கும் வயது
ஏறுகிறது. நம்மைப் போல் அதற்கு உருவம் இருந்தால் நரை, திரை , மூப்பு எல்லாம் காணுமல்லவா
? இறை நிலை ஒளி வடிவம் என்பதால் , நிறை உருவில்லையாதலால் , அதற்குள் மாற்றமில்லை.
எனவே , வான்வெளியில் பயணப்படுவதால் காலம் ஏற்பட்டு வயது என்ற ஒன்று சேர்கிறது .
பயணப்படாத ஒளித்தன்மை (நிர்குண ) இயங்காத ஒளித்தண்மை இறைவன் என்று புராணம்
கூறுகிறது . நீங்காத இறைக்கு "வாலறிவன்" என்று வள்ளுவர் சரியாகப் பெயர் சூட்டினார்.
நிறை (Mass)
அனைத்துப் பொருளும் நிறை (m) கொண்டவையாகும் . நிறைக்கும் ஒளிக்கும் தொடர்பு உண்டா
என்றால் நெருங்கிய இன்றியமையாதத் தொடர்பு உண்டு ! அது யாதெனில் , ஒளியின் வேகத்தில்
ஒரு நிறை பயணித்தால் அதன் உச்சபட்ச ஆற்றல் வெளிப்படும் என்பதாம் !. ஒளியின் வேகம் (C )
என்றும் ,
நிறையின் அளவு ( m ) என்றும் , உச்சபட்ச ஆற்றல் (e ) என்றும் குறிப்பிட்டால், ( e=mc2 ) என்ற
ஐன்ஸ்டின் விஞ்ஞானியின் சமன் பாட்டினால் தொடர்பு காட்டும் . எனவே நிறை m=e/c2
ஆற்றல் (Energy)
ஓவ்வொரு பொருளும் ஓவ்வொரு அளவில் ஆற்றல் பெற்றது. எதுவும் எதற்கும் சமமில்லை என்ற
வகையில் இயற்கை வடிவமைத்துள்ளது என்பது உண்மை ! அதனால் அவ்வப்பொருளின் நிறை
வைத்தே அதனதன் ஆற்றல் அமைந்துள்ளது ! ஒளியின் வேகத்தில் பயணித்தாலன்றி உட்சபட்ச
ஆற்றல் விளைக்காது எப்பொருளும்! பிரபஞ்சத்தின் அனைத்து நிறைகளிலும் ஆற்றல்
இருப்பதால் இறை நிலைக்கு ஆற்றல் என்றும் பெயரிடலாம்.
சார்பறிதல் /சார்புடைமை(relativity)
நிறையும், ஆற்றலும் நேரடித் தொடர்புடையவை என்பதால் பெருநிலையில் பேராற்றல் உள்ளது.
சிறு நிறையின் ஆற்றல் சிறியது! அதனால் பெருநிறை, சிறு நிறை என்ற சார்புடைமை
உண்டாகிறது; ஒளியின் பயண வேகம் மாறினாலும் சார்பு என்பது மாறுபட்டு காலம் வேறாகி
நிலை மாறுபடுகிறது !. நிறைக்கு ஈர்ப்பு விசை (gravity) உண்டு என்பதால் வெட்ட வெளியானது
(space)வளைக்கப்படுகிறது !
அதில் பயணிக்கும் ஒளியும் நிறையின் விசையால் வளைகிறது!. பெருநிறைக்கு அதிகம்
வளைதலும் , மிக அடர்ந்த நிறைக்கு மீளா நிலையும் ஒளிக்கு ஏற்படுவது சார்புடைமை என
ஜெர்மன் நாட்டு விஞானி ஐன்ஸ்டின் தான் முதலில் கண்டறிந்ததாக உலகம் சொல்லும் !.
ஆனாலும் நமது புராணங்கள் , மற்றும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சோதிட நூலில் , இந்த
சார்புடைமை அடிப்படையில் கடவுளர்கள் மறைதல் , தோன்றுதல் , கண்ணில் படாமை , உருவு
சிறுத்தல் , பெருத்தல் , கோள்கள் பயணம் , அவற்றின் கால அளவு , நட்சத்திர மண்டலம் , பால்
திவளி மண்டலம் (miliky way galaxy)என எண்ணற்ற செய்திகள் தரப்பட்டுள்ளன என அறியலாம்.
ஒப்பிடுதல் / ஒப்பிட்டாய்வு
புராணச் செய்திகளிலும் , இறை மார்க்கத்திலும் ( பொதுவான சனாதன தர்மம் என்னும் இந்து
மதம் ) ஒளி தத்துவம் என்பதை ஆண் பாலாக்கி இறைவன் , கடவுள் எனப்படுகிறது. காலம்
என்பது , காலம் என்றே கூறப்படும் ;
ஒளி(விஞ்ஞானம்) -----> இறைவன்
நிறை(விஞ்ஞானம்) -----> உயிர்கள் , சமப்பொருள்
ஆற்றல்(விஞ்ஞானம்) ------> இறைநிலை
ஒளியானவன் இறைவன் பயணவேகத்தால் ; விண் வெளியே இறைவன் வடிவத்தால்,
இயக்கத்தால் ; அதனால் முழு நிறையும் அவனே ! வெளியே ஐம்பூதங்கள் மூலம் ( space is
the root of all five elements) முழு நிறை என்பதால் அதை மீறிய நிறை இல்லை.
இறைவன் ஒன்றின்றி வேறில்லை! நிறைகளில் மாற்றம் கொண்டால் , உயிர்களும்,
சடங்களும் ; உயிர்களின் நிறை மாற்றத்தால் உயர்திணை , அஃறிணை; உயிர்களுள்
மனத்தின் திண்மையால் தேவர்,மனிதர்,யட்சர்,கந்தருவர்,அரக்கர், அசுரர், தானவர் என
உயர்திணையும் , அஃறிணையில் விலங்குகள், ஊர்வன , பறப்பன , புல்பூண்டு , மரம்
எனவும் , விரியும். புலன்கட்டால் வீழ்ந்து சுயவிருப்பால் நிறை சேர்க்கும் இயக்கம்
கொண்டு, தன்நையே கனமாக்கிக் கொள்ளும் பெருநிறைகள் வல்லரக்கர்(black
holes)ஆவர். சார்புடைமையால் பெருநிறைகளும் , வெவ்வேறு நிறைகளும் சேர்ந்து
இயங்கும் தன்மை விளைய வின்வெளியே ஒரு பேரியக்கமாகிறது . ஈர்ப்பு விசை என்னும்
தாக்கம் நிறைகளுக்கிடையே நிலவி அதனால் தன்னிலை தக்க வைத்துக் கொள்ள சுய
விசையை நிறைகள் உருவாக்கி நிலைக்கின்றன. இவ்வீர்ப்பு விசைக்கு ஒளியும்(Light),
வெளியும்(space) பணிந்து அடங்கலே சார்புடைமை காட்டும் ; இதுவே ஐன்ஸ்டினின்
பொது சார்புடைமை கொள்கை (General theory of realtivity)
ஒப்பபீட்டு பட்டியல்
விஞ்ஞான உண்மை/
விஞ்ஞான பெயர்
புராண விளக்கம் /
புராணப்பெயர்
ஒப்பீடு /
ஒன்று அல்லது வேறு
உலகம் உருவானதில்
வின்வெளியே முதல்
/அண்டவெளி(space)
எங்கும் வெளி
நிறைந்திருந்தது;
வேறுன்றுமில்லை/
மகத்தாகாசம் (பிரம்மாண்டம் )
ஒன்று / இயக்கமற்றது
அனலாகி ஒளி வந்தது /ஒளி(light) ஒளி வடிவாய் இறை நின்றது /
விராட வடிவம்
ஒன்று/இயக்கம் உண்டாவது
நிறைகள் உருவாயின /நிறை,
ஆற்றல்(mass, energy)
படைப்பு தொடங்கியது
/உயிர்கள் , சடங்கள்
ஒன்று/இயக்கம் பரவியது
ஆற்றல் பொதிந்த வெளியே
நிறையாக உருமாற்றம் / சுத்த
வெளி , நிறை , ஒளிவடிவம்
இறைத்தத்துவம்
அனைத்தையும் தாண்டிய
பேராற்றல் /
இறைவன்,கடவுள்,
ஆண்டவன்
ஒன்று
தன்னடர்த்தி மிகுந்து
அனைத்தையும் தன்பால் ஈர்த்தல்
/ கருந்துளை (black hole)
எண்ணிக்கை குறைவு
அதிக ஆசையில்
அனைத்தையும் ஆளும்
ஈர்ப்புக்கொள்ளல் /வல்லரக்கர்
பேராசை கொண்டவர்கள்
ஒன்று/ நல்லரக்கர்(dark
matter)பலத்திருக்க
வல்லரக்கர் குறைவே
ஒளியும் வெளியும் வளைந்து
கொடுத்தல் / பொது
சார்புடைமை(Genral theory of
realtivity)
தேவரும், பிறக்கடவுளும்
அடங்கி போதல் /வரத்தின்
மகிமையால் அடங்கல்
ஒன்று
விளைவு
மேற் சொன்ன ஒப்பீட்டில் ஒளியை அடக்குதல் போன்ற தோற்றம் இருப்பினும் , வேறு
ப்ரபஞ்சங்களில் ஒளியோ , அதை தாண்டிய வேறு தணிமமோ (entity) ஒளியைக் காட்டிலும் வேகம்
அதிகம் என்றால் , அது இந்த கருந்துளை ஈர்ப்பை முறியடித்து அழிந்து , அத்தனை ஆற்றலையும்
தன்னுளே சேர்த்திடும். இதனை புராணங்கள் வைணவத்தின் வாயிலாக "மிக்க இறைநிலை"
என்கின்றன. அதையே இறைவனின் தனித்தன்மையாகவும் கூறுகிறது.
ஆய்வு முடிவு
எனவே, புராணங்களில் அடங்கியுள்ள படைப்பின் ரகசியம் புனையப்பட்டதல்ல; முற்றிலும்
விஞ்ஞான உண்மைகள் தாம் என்றும் , பெயர்களும் உருவகங்களும் சூழ்ந்ததால் வேற்றுமை
உடையவை போல் காட்சி அளிக்கின்றன . இரண்டும் ஒரே கருத்தை நிலை காட்டுவது அநியதக்கது என்பது முடிவு.